ADDED : ஆக 06, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி, 49. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், வயல்வெளியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆடு மேய்த்து கொண்டிருந்த கொளஞ்சி மீது மின்னல் தாக்கியது. அதில், சம்பவ இடத்திலேயே கொளஞ்சி உயிரிழந்தார்.
இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.