
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பொதுப்பணித்துறை சார்பில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன்; இவர், கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பனை விதைகளை நடக்கோரி, கடந்த 5ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்தார்.
இதையடுத்து, பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் கரையில், பொதுப்பணித்துறையினர் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.