/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
/
வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
ADDED : மார் 24, 2024 04:38 AM

திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா நடந்தது.
திட்டக்குடி அசனாம்பிகையம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. ஏழாம் நாள் 21ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
நேற்று காலை திருத்தேர் விழாவையொட்டி விக்னேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சோமாஸ்கந்தர் மற்றும் அசனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விக்னேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், அசனாம்பிகையம்மன் அலங்கரிக்கப்பட்டு மூன்று தனித்தனி தேர்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். இரவு நடராஜ சுவாமி, வீதியுலா நடந்தது.

