/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணியர் நிழற்குடை: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
பயணியர் நிழற்குடை: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : ஆக 18, 2024 05:37 AM

கிள்ளை : கிள்ளை முடசல் ஓடையில் பயணியர் நிழற்குடையை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 5.50 லட்சம் மதிப்பில், கிள்ளை முடசல் ஓடையில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கிள்ளை நகரஅ.தி.மு.க., செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் தமிழ்மணி ஆகியோர்முன்னிலை வகித்தனர். புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விழாவில், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட துணைசெயலாளர்கள் செல்வம், தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், கிராம தலைவர் நல்லரையான்,விசைப்படகு சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் மகேஷ், நகரஇளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் அறிவழகன், ஜெயந்தி ஜெய்சங்கர், சிவராஜன், கப்பலோட்டி தமிழன் உட்பட பலர் பங்கேற்றனர்.

