/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜயகாந்த் வழியில் மக்கள் பணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
/
விஜயகாந்த் வழியில் மக்கள் பணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
விஜயகாந்த் வழியில் மக்கள் பணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
விஜயகாந்த் வழியில் மக்கள் பணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
ADDED : ஏப் 10, 2024 01:10 AM

திட்டக்குடி : விஜயகாந்த் எப்படி மக்களுக்காக வாழ்ந்தோரோ, அவர் வழியில் மக்களுக்கான பணிகளை விரைந்து செய்வேன் என, தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் சிவக்கொழுந்து, நேற்று மங்களூர் ஒன்றியம், நெய்வாசல், ஆவினங்குடி, பட்டூர், போத்திரமங்கலம், கீழ்ச்செருவாய், இடைச்செருவாய், வாகையூர், ராமநத்தம், தொழுதுார் உட்பட பல்வேறு கிராமங்களில் முரசு சின்னத்திற்கு தீவிர ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் தனது இறுதிமூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்தவர். அவரது வழியில் மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் செய்து கொடுப்பேன்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி ஆட்சி அமைக்க நாம் உழைக்க வேண்டும் என பேசினார். தொழுதுாரில் பெண் ஒருவர் சாலைவசதி கேட்டு மனு கொடுத்தார்.
வெற்றிபெற்று, எனது தொகுதி நிதியில் சாலை வசதி செய்து தருகிறேன் என தெரிவித்தார்.
மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன், மாநில வணிகரணி துணைசெயலர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வன், முன்னாள் சேர்மன் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எழிலரசன், தொழுதுார் அருள், சித்துார் வேல்முருகன், கண்டமத்தான் சரவணன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் பழனியப்பன், ஐயப்பன், ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

