/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை வாய்ப்பு முகாம்: பணி ஆணை வழங்கல்
/
வேலை வாய்ப்பு முகாம்: பணி ஆணை வழங்கல்
ADDED : ஆக 20, 2024 12:07 AM

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக சர்தேச உறவுகள் மையம் மற்றும் பயிற்சி வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் இயக்குனரகம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடந்த முகாமில், ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியில் உள்ள அரபு ஜியோடெக் ஆய்வக பிரதிநிதிகள் பங்கேற்று நேர்முக தேர்வை நடத்தினர்.இதில், பொறியியல் துறை மாணவர்கள் 3 பேர், புவி அறிவியல் துறை மாணவன் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அன்பரசன், தேனு அரேரா, சிவசங்கர், டேவிட் மைக்கேல் எலியா ஆகியோருக்கு பணி ஆணையை துணை வேந்தர் கதிரேசன் வழங்கினார்.
சர்வதேச உறவுகள் மைய இயக்குனர் குமார், பயிற்சி வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் இயக்குனரக இயக்குனர் கிருஷ்ணசாமி, மற்றும் கார்த்திகேயன், முருகப்பன், வைத்தியநாதன், மணிகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

