/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1.35 லட்சம் மரக்கன்று நடும் பணி என்.எல்.சி., சேர்மன் துவக்கி வைப்பு
/
1.35 லட்சம் மரக்கன்று நடும் பணி என்.எல்.சி., சேர்மன் துவக்கி வைப்பு
1.35 லட்சம் மரக்கன்று நடும் பணி என்.எல்.சி., சேர்மன் துவக்கி வைப்பு
1.35 லட்சம் மரக்கன்று நடும் பணி என்.எல்.சி., சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 26, 2024 04:30 AM

நெய்வேலி: நெய்வேலியில், 1.35 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி துவக்கி வைத்தார்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நடத்தப்படும், 'விருட்ச ரோபன் அபியான்' என்ற மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, என்.எல்.சி., சார்பில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில், 5மாவட்டங்களில் என 14 இடங்களில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், 42,500 மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், 92,500 கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நெய்வேலியில் சுரங்கம்-1 ஏ பகுதியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
இயற்கை சமநிலையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நிலக்கரி அமைச்சகத்தால், 2021ம் ஆண்டில் 'விருட்ச ரோபன் அபியான் திட்டம்' தொடங்கப்பட்டது.
என்.எல்.சி., சுரங்கங்கள், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கம், வனவளர்ப்பு மற்றும் புதுமையான நிலைத்தன்மை போன்ற முயற்சிகள் மூலம், நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. நெய்வேலி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 3 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து வருகிறது என, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுரேஷ் சந்திரசுமன், சமிர் ஸ்வரூப், வெங்கடாசலம், பிரசன்ன குமார் ஆச்சார்யா, என்.எல்.சி., விஜிலென்ஸ் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில், பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனத்திலிருந்து இணைய வழியில், என்.எல்.சி., மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிலக்கரி நிறுவனங்களில், மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

