/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை
/
கட்டையால் தாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : மார் 08, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: முன் விரோதம் காரணமாக கட்டையால் தாக்கியவர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த பெருந்துறையை சேர்ந்தவர் இமையகண்ணன், 35. அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் முத்துகுட்டி (எ) இளையபெருமாள் என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இளையபெருமாள் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த இமையகண்ணன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைபெருமாள் மீது கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.