/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முக்கிய சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு
/
முக்கிய சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு
முக்கிய சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு
முக்கிய சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு
ADDED : ஆக 12, 2024 05:31 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்துகள் நடக்கிறது.
சென்னை கன்னியாக்குமரி தொழில்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம் நகரத்தில் பணிகள் நடந்தது.
விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை பணிகள் நடக்காமல் இருந்தது.
அப்பகுதி குறுகலாக இருப்பதால் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை ரெடிமேடாக செய்து வந்து பொறுத்துகின்றனர்.
கீழ்பட்டாம்பாக்கத்தில் அதேபோல் பொறுத்த பள்ளம் தோண்டினர்.
ஆனால் கால்வாய் பொறுத்திய பிறகும் பள்ளத்தை மூடவில்லை.இந்த சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் செல்கின்றனர்.
மேலும் கடலுார், பண்ருட்டி முக்கிய சாலையை ஒட்டி பள்ளம் இருப்பதால் தினமும் விபத்துகள் நடக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர்.
உடனடியாக பள்ளத்தை மூடி சாலை அமைக்கவேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.