/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி
/
ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி
ADDED : ஏப் 16, 2024 11:07 PM

கடலுார், - கடலுார் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் 2,333 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓட்டுச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர், சாமியானா பந்தல் அமைத்தல், எல்லைக்கோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மேஜைகள், சேர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பதற்றமான, மிகவும் பதற்றமான ஓட்டுசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

