/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர்' பஞ்சாங்கம் புத்தகம் விருதையில் பா.ஜ., வழங்கல்
/
'தினமலர்' பஞ்சாங்கம் புத்தகம் விருதையில் பா.ஜ., வழங்கல்
'தினமலர்' பஞ்சாங்கம் புத்தகம் விருதையில் பா.ஜ., வழங்கல்
'தினமலர்' பஞ்சாங்கம் புத்தகம் விருதையில் பா.ஜ., வழங்கல்
ADDED : ஏப் 13, 2024 05:16 AM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் பஞ்சாங்கம் புத்தகத்தை பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் வழங்கினார்.
'தினமலர்' நாளிதழ் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் இதழ் நேற்று வெளியானது.
இதனை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான செந்தில்குமார் வழங்கினார்.
அப்போது, பக்தர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி, 100 சதவீதம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., ஒன்றிய தலைவர்கள் தங்க வெங்கடேசன், பரமசிவம், கந்தன், பாலமுருகன், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் செல்வராஜ், வர்த்தக அணி மாவட்ட பொதுச் செயலாளர் பரந்தாமன், வெளிநாடு வாழ் பிரிவு மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஜெய்கணேஷ், மணிகண்டன், மணிகண்ணன், ஆதிநாராயணன், ஜெயராமன், கலைச்செல்வன் மற்றும் பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் கவுன்சிலர் பாக்யராஜ், வழக்கறிஞர் குணசேகரன் உடனிருந்தனர்.

