ADDED : மார் 03, 2025 07:21 AM
சேத்தியாத்தோப்பு : சின்னநற்குணம் கிராமத்திற்கு பஸ் இயக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணத்திற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், இயக்கப்பட்ட மினி பஸ் நிறுத்தப்பட்டது. விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தொலைவில் எறும்பூர் பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டி உள்ளது. முதியோர், பள்ளி மாணவர்கள் வெகு துாரம் சென்று பஸ்சில் செல்கின்றனர்.
சின்னநற்குணம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தும் இதுவரை இயக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு, கிராம மக்கள் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராததால் பகல் 1:35 மணிக்கு கலைந்து சென்றனர்.