ADDED : செப் 02, 2024 09:38 PM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாதிரி பள்ளி , மருங்கூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளி மாணவ மாணவிகளுக்கு 333 சைக்கிள்கள். பத்திரக்கோட்டை மேல்நிலைப் பள்ளியில், பத்திரக்கோட்டை, வெங்கடாம்பேட்டை, இந்திரா நகர், ஆகிய மூன்று பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு 324 சைக்கிள்கள் என, மொத்தம் 658 சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
டி.இ.ஒ., துரைப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ராஜா, ராமச்சந்திரன் , துணைத்தலைவர்கள் ஆடலரசு, செல்வகுமார், ஊராட்சி தலைவர் தெய்வானை, தலைமை ஆசிரியர்கள் முருகையன், ராமலிங்கம், பன்னீர்செல்வம், மீனாம்பிகை முன்னிலை வகித்தனர்.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசுந்தரி, வள்ளலார் பள்ளி இயக்குனர் நடராஜன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.