sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி - சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

/

பண்ருட்டி - சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

பண்ருட்டி - சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

பண்ருட்டி - சென்னைக்கு மீண்டும் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : மே 04, 2024 06:53 AM

Google News

ADDED : மே 04, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி - சென்னைக்கு மீண்டும் தடம் எண் 149 பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு பஸ் தடம் எண்.149 அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 8:30 மணிக்கு சென்றடைகிறது.

பின் அங்கிருந்து 9:30 மணிக்கு புறப்பட்டு வரும் . மீண்டும் சென்னைக்கு மதியம் 3:20 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இதில் பிற்பகல் 3:20 மணிக்கு மீண்டும் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

அதன்பின் காலை 5:00 மணிக்கு மட்டுமே ஒரு முறை சென்னைக்கு பண்ருட்டியில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. பிற்பகல் 3:00 மணிக்கு சென்னை செல்லும் தஞ்சாவூர், கும்பகோணம், காட்டுமன்னார்கோவில்,சிதம்பரம் ஆகிய போக்குவரத்து கழக பஸ்கள் பண்ருட்டி மார்க்கத்தில் பஸ்கள் இல்லை.

இதனால் மதியம் 3:00 மணிக்கு சென்னை செல்வதற்கு போதிய பஸ்கள் இல்லை. அதுவும் சுபமுகூர்த்தம், வார விடுமுறை , ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பஸ்கள் இல்லாமல் பயணிகள் பஸ்சில் நின்று செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

எனவே போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் பண்ருட்டி - சென்னைக்கு செல்லும் பஸ் தடம் எண். 149 பிற்பகல் 3:20 க்கு மீண்டும் இயக்கிட வேண்டும்.






      Dinamalar
      Follow us