/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரமற்ற வடிகால் பணி பொதுமக்கள் அச்சம்
/
தரமற்ற வடிகால் பணி பொதுமக்கள் அச்சம்
ADDED : ஏப் 21, 2024 05:50 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் தரமற்று கட்டப்பட்ட வடிகால் சிலாப் உடைந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு டானாசாவடி பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால், கடந்த மாதம் அப்பகுதியிலிருந்து கழிவுநீர் நரியன் ஓடைக்கு செல்லும் வகையில் வடிகால் கட்டப்பட்டது. இந்த கால்வாய் கட்டியும் தண்ணீர் தேங்கியது. அதையடுத்து, கிழக்கு தெரு பகுதியில் 10 மீட்டர் துாரத்திற்கு புதியதாக வடிகால் அமைத்து கழிவுநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த வடிகால் சிலாப் தரமற்று கட்டப்பட்டதால் உடைந்து விழுந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் இந்த வடிகாலை ஆய்வு செய்து உடைந்த சிலாப்பை சரி செய்யவும், தரமற்று அமைக்கப்பட்டது குறித்து விசாரிக்கவும் வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

