ADDED : ஏப் 11, 2024 11:49 PM

கடலுார் : கடலுாரில் உள்ள பள்ளி வாசல்களில், ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
ராம்ஜான் பண்டிகையையொட்டி, கடலுார் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
பரங்கிப்பேட்டை
ரம்ஜான் பண்டிகையொட்டி, பரங்கிப்பேட்டை மீராப்பள்ளிவாசலில், முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, பரங்கிப்பேட்டை, கிள்ளை, பு.முட்லுார், பின்னத்துார், கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு இருந்தனர். நோன்பு முடிந்து நேற்று, ரம்ஜான் பண்டிகையொட்டி, அந்தந்த பகுதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டித்தழுவி, ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

