/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை கண்டெடுத்த தர்கா ரூ.83.91 லட்சத்தில் புனரமைப்பு பணி
/
பரங்கிப்பேட்டை கண்டெடுத்த தர்கா ரூ.83.91 லட்சத்தில் புனரமைப்பு பணி
பரங்கிப்பேட்டை கண்டெடுத்த தர்கா ரூ.83.91 லட்சத்தில் புனரமைப்பு பணி
பரங்கிப்பேட்டை கண்டெடுத்த தர்கா ரூ.83.91 லட்சத்தில் புனரமைப்பு பணி
ADDED : மார் 13, 2025 12:24 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கண்டெடுத்த தர்கா 83 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புரனமைப்பு செய்வதற்கான துவக்க விழா நேற்று நடந்தது.
பரங்கிப்பேட்டை உக்காஷா தர்கா என்னும் கண்டெடுத்த தர்காவை, புனரமைப்பு செய்ய பழமையான தர்காக்கள் புனரமைப்பு மானிய திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் 83 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இப்பணிக்கான, துவக்க விழா நேற்று தர்கா வளாகத்தில் நடந்தது.
பரங்கிப்பேட்டை துணை சேர்மன் முகமது யூனுஸ் தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார்.
இமாம் காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி கிராத் ஓதினார். வக்பு வாரிய மாவட்ட கண்காணிப்பாளர் முகம்மது ஷபியுல்லா, ஆய்வாளர் ஷேக் முகம்மது, கடலுார் எம்.கே.எம்.எஸ்., கன்ஸ்ட்ரக்க்ஷன் நிர்வாகி பஷீருல்லா முன்னிலை வகித்தனர். தர்கா தலைவர் பஷீர் அகமது வரவேற்றார்.
முகம்மது தவ்பிக், ஓய்வுப்பெற்ற இந்தியன் வங்கி அதிகாரி முகமது ரபீத், பரங்கிப்பேட்டை நிர்வாகிகள் ஹசன் குத்துாஸ், முகமது அஸ்லம், பாவாசா மரைக்காயர், ஜமாத் பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர், தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், மாலீமார், முகமது இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.