/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோணாங்குப்பத்தில் மினி டேங்க் பழுது
/
கோணாங்குப்பத்தில் மினி டேங்க் பழுது
ADDED : மே 26, 2024 06:00 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் பழுதான குடிநீர் மினி டேங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மு.பரூர் செல்லும் வழியில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மினி டேங்க் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் மினி டேங்குக்கு செல்லும் பைப் லைன் பழுதடைந்து, குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோடைகாலம் துவங்கிய நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதியடைகின்றனர்.
எனவே, கோணாங்குப்பத்தில் காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் மினி டேங்க் பைப் லைனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.