/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை மின்நிலையத்தை 110கே.வி.,யாக மாற்ற திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
/
துணை மின்நிலையத்தை 110கே.வி.,யாக மாற்ற திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
துணை மின்நிலையத்தை 110கே.வி.,யாக மாற்ற திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
துணை மின்நிலையத்தை 110கே.வி.,யாக மாற்ற திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 05:01 AM

திட்டக்குடி: திட்டக்குடி துணை மின்நிலையத்தை 110கே.வி.,யாக மாற்ற வேண்டும் என நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: திட்டக்குடி நகராட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் செயல்படும் அமைச்சர் கணேசன் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தரும் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோருக்கு திட்டக்குடி நகராட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
திட்டக்குடி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகராட்சி பகுதியில் ஏற்படும் மின்வெட்டால் வியாபரிகள்,பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். 33கே.வி.,திறனுடைய திட்டக்குடி துணைமின்நிலையத்தை, 110கே.வி.,யாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி பேரூராட்சியாக இருந்தபோது செயல்பட்ட ஆடு, மாடு சந்தை மூலம் பேரூராட்சி மற்றும் வணிகர்களுக்கு நல்ல வருவாய் இருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், போதிய வருவாய் இன்றி திட்டப்பணிகளை செயல்படுத்த முடியாமல் திணறிவருகிறது.
எனவே, வேளாண் விரிவாக்க மைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில், கால்நடை வார சந்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
திட்டக்குடியில் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதி மூன்று கி.மீ.,துாரமுள்ள இளமங்கலத்திற்கு சென்று மதியஉணவு சாப்பிட்டு திரும்புவதில் சிரமம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்திலேயே விடுதி அமைக்க பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சரும், கலெக்டரும் ஆய்வு செய்து இடம் தேர்வு செய்தனர்.
தற்போது அதற்கும் எதிர்ப்புகள் கிளம்புவது சமூகநீதிக்கு எதிரான செயல். அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி, பள்ளி வளாகத்திற்குள் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும் என்றார்.