/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 29, 2024 07:36 AM

விருத்தாசலம்: தமிழ்நாடு அரசு பணி ஓய்வு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில், விருத்தாசலம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில துணைத் தலைவர் நேரு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், மங்களூர் கண்ணகி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், திருஷானசம்பந்தன், வீரமுத்து, வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் குணசேகரன் வரவேற்றார்.
மாநில தலைவர் விஜயபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, ஊராட்சி உதவி இயக்குனர் அலுவகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
மாவட்ட செயற்குழு கணேசன் நன்றி கூறினார்.

