ADDED : பிப் 23, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம், : நெய்வேலி நுகர்வோர் மற்றும் சுற்றுச் சுழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வடக்குவெள்ளுர் ஊராட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நெய்வேலி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர் சக்கரியாஸ் தலைமை தாங்கினார்.
அமைப்பு செயலாளர் உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு குறித்து நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.