ADDED : ஏப் 25, 2024 03:55 AM

மந்தாரக்குப்பம்: கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதி வழியாக தினசரி பஸ், லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் இச்சாலையில் விபத்துகளை குறைக்கவும், வாகனங்கள் இடையூறு இன்றி சென்று வர தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 7.2 மீட்டருக்கு சாலை விரிவாக்க பணி நடந்தது.
தற்போது மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை உள்ள நான்கு வழிச்சாலையில் மேலும் 1.8 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

