/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் வருகைக்காக வேகமெடுத்த சாலை பணி; அரைகுறையாக கிடப்பில் போடப்பட்ட அவலம்

ADDED : மார் 10, 2025 12:22 AM

கடலுார்; கடலுாரில் முதல்வர் வருகையையொட்டி பழைய கலெக்டர் அலுவலக சாலை விறுவிறு என நடந்த பணிகள் முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 21ம் தேதி கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முதல்வர் வருகைக்காக தேசிய நெடுஞ்சாலை புதுப்பித்தல், சாலையில் வெள்ளை கோடு, புதிய மின்விளக்குகள், குப்பைகள் இல்லாமல் துாய்மைப்படுத்தப்பட்டது.
மேலும் பழைய கலெக்டர் அலுவலக சாலையை விரிவாக்கம் செய்து, சாலையின் இரு பக்கத்திலும் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இரவு பகலாக தீவிர பணி மேற்கொண்டனர். இதற்காக 20 அடி சாலையை மாற்றி, 44 அடியாக விரிவாக்கம் செய்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் விறு விறுப்பாக துவங்கியது.
சாலை இருபுறங்களிலும் புதியதாக மின் விளக்குகள் அமைப்பதற்காக அழகிய மின்கம்பங்கள் நடப்பட்டன.
ஒரு பகுதி மட்டுமே படைபாதையில் கற்கள் பதிக்கப்பட்டன. மற்றப்பகுதி நடைபாதையில் எதுவும் செய்யப்படவில்லை.
முதல்வர் விழா முடிந்த கையோடு நடைபாதை மற்றும் புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி ஆகியவற்றை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.