/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆவணமின்றி ரூ.2.29 லட்சம்: பறக்கும் படை பறிமுதல்
/
ஆவணமின்றி ரூ.2.29 லட்சம்: பறக்கும் படை பறிமுதல்
ADDED : மார் 23, 2024 11:58 PM

திட்டக்குடி: திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரத்து 150 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி அடுத்த அகரம் சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நேற்று காலை 9:00 மணியளவில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி தண்டபாணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ராயல் என்பீல்டு பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பேக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 650 ரூபாய் இருந்தது. விசாரணையில், திட்டக்குடியைச் சேர்ந்த கணேசன், 39; என்பதும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது.
உடன் பணத்தை பறிமுதல் செய்து, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், காட்டுக்கூடலுார் சாலை, அரசு தோட்டக்கலை பண்ணை பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக காரில் வந்த கண்டப்பங்குறிச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி, 55, என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி, 66 ஆயிரத்து 500 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது.
உடன் பணத்தை பறிமுதல் செய்து, விருத்தாசலம் துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அந்த பணம் விருத்தாசலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

