/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரி மோதி விபத்து பள்ளி மாணவர் பலி
/
லாரி மோதி விபத்து பள்ளி மாணவர் பலி
ADDED : மார் 27, 2024 07:18 AM
வடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவர், மினி லாரி மோதி உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ், 10; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. சந்தோஷ் திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்பகுதியில் உள்ள மணலில் தார்பாய் போத்திக்கொண்டு தூங்கி உள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்ற மினி லாரி சிறுவனின் மீது ஏறியதில் சிறுவன் சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது தாய் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

