/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனிப்பிரிவு ஏட்டுவிற்கு ஆடியோவால் வந்த வேட்டு
/
தனிப்பிரிவு ஏட்டுவிற்கு ஆடியோவால் வந்த வேட்டு
ADDED : ஜூன் 11, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் சப் டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் பணிபுரிந்த எஸ்.பி., தனிப்பிரிவு காவலர், ஆற்று மணல் கடத்தல், கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாமூல் வாங்கி கொழுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல், அவரது தொல்லை அதிகரித்ததால் இந்த விவகாரம் ஆடியோ ஆதாரத்துடன் எஸ்.பி., காதுக்கு எட்டியுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த எஸ்.பி., தனிப்பிரிவு காவலரை அழைத்து செம டோஸ் விட்டு தனி பிரிவு ஏட்டிடம் இனி நீ இதற்கு தகுதி இல்லை என கூறி, அவரை விருத்தாசலம் சப் டிவிஷனில் உள்ள ஸ்டேஷன் ஒன்றில் சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபடுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.