/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
/
விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 10, 2025 12:25 AM

கடலுார்; அரசு விளையாட்டு அரங்கம் அமைக்க ஆதிவராகநல்லுாரில் இடத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, விளையாட்டுத்திறனை மேம்படுத்தி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்ய, ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியிலும் ரூ. 3 கோடி மதிப்பில் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கான விளையாட்டு அரங்கம் அமைக்க, முதல் கட்டமாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆதிவராகநல்லுாரில் உள்ள அரசு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதே போல் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பின் கலெக்டர் கூறுகையில்; ஆதிவராகநல்லூர் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அரசுக்கு சொந்தமான வேறு இடம் இருந்தாலும் அதனை பரிசீலனை செய்யப்படும்.
அனைவரும் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறினார்.