/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதன்மை விளையாட்டு மையத்தில் சேர மாநில அளவில் வீரர்கள் தேர்வு
/
முதன்மை விளையாட்டு மையத்தில் சேர மாநில அளவில் வீரர்கள் தேர்வு
முதன்மை விளையாட்டு மையத்தில் சேர மாநில அளவில் வீரர்கள் தேர்வு
முதன்மை விளையாட்டு மையத்தில் சேர மாநில அளவில் வீரர்கள் தேர்வு
ADDED : மே 07, 2024 11:23 PM

கடலுார் : கடலுாரில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர மாநில அளவில் டேக்வோண்டோ வீரர்கள் தேர்வு நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனை புரிய விளையாட்டு பயிற்சி, தங்கும் இடவசதி மற்றும் உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகிறது.
நடப்பு கல்வியாண்டிற்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் டேக்வோண்டா விளையாட்டில் மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில், ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்த கடலுார், திருச்சி, விருதுநகர் உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 21 வீரர்கள் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் வீரமணி, இளவரசன் ஆகியோர் சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர்.

