/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு
/
மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு
மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு
மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு
ADDED : மார் 30, 2024 06:31 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி சார்பில், சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.
இங்கு, 40 சிறைவாசிகள் கற்போராக பயின்று வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள், பாடநுால்கள் அரசால் வழங்கப்பட்டது.
மத்திய சிறையில் நடந்த சிறப்பு எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வு மையத்தை, மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணக்குமார் பார்வையிட்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நசீம் ஓரா பேகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமா, சிறைத்துறை கண்காணிப்பாளர் உடனிருந்தனர்.
சிறைவாசிகளுக்கான ஆசிரியர்கள் ஸ்டாலின், ஷாலினி ஆகியோர் தேர்வை நடத்தினர். இதில் 40 சிறைவாசிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.