/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 1 பொதுத் தேர்வில் சிவபாரதி பள்ளி சாதனை
/
பிளஸ் 1 பொதுத் தேர்வில் சிவபாரதி பள்ளி சாதனை
ADDED : மே 16, 2024 11:29 PM

விருத்தாசலம்: சிறுவரப்பூர் சிவபாரதி பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
மாணவி ராஜராஜேஸ்வரி 579 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி தீபிகா 570 இரண்டாமிடம், மாணவர் ஆகாஷ் 548 மூன்றாமிடம் பிடித்தனர்.
மேலும், 13 மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர். இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவர் சென்டம் எடுத்தார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் சிவநேசன், முதல்வர் ஆனந்தபாஸ்கர் ஆகியோர் சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினர். மேலும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

