/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் ஆய்வு
/
சில்வர் பீச் மேம்பாட்டு பணி கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 27, 2024 05:20 AM

கடலுார் : சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுார் சில்வர் பீச் 4.98 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரை தென் தமிழகத்தின் இரண்டாவது நீண்ட கடற்கரை பகுதியாக உள்ளது. உப்பனாறுகள் மூலம் தீவு போலவும் உள்ளது.
சில்வர் பீச் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், மேம்படுத்தும் பணிக்கு அரசு மூலதனம் மானிய திட்ட நிதியின் கீழ் 4.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிதியில், சில்வர் பீச்சில் பூங்காவை புதுப்பித்தல், விழா மேடை பகுதியில் பேவர் பிளாக் பொருத்துதல், நடை பாதை மற்றும் நடைபாதை இருக்கைகள், ஹைமாஸ் விளக்குகள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கடற்கரை பகுதி, விழா மேடை, தற்போது உள்ள கடைகள் இருக்கும் பகுதி, கடைகள் மாற்றப்படும் இடங்கள் போன்றவைகளை பார்வையிட்டார்.
பின், பணிகள் குறித்து இன்ஜினியர்களிடம் கேட்டறிந்தார். பணிகள் தரமானதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.
மாநகராட்சி கமிஷனர் அனு, மாநகராட்சி இன்ஜினியர்கள் உடனிருந் தனர்.

