ADDED : ஏப் 05, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மகனைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் செய்துள்ளார்.
கடலுார், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

