/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
/
உதவி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
ADDED : மே 22, 2024 12:50 AM

சிதம்பரம், : சிதம்பரம் அடுத்துள்ள கீழமூங்கிலடி, ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உதவி பேராசிரியர்களுக்கான மாநில தகுதி பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிற்சி வகுப்பை கல்லுாரி செயலர் பாபு துவக்கி வைத்தார். முதல்வர் மாலதி வரவேற்றார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக்குமார் பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து பேசினார். ராஜமன்னார்குடி அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் முரளிதரன் பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து, புரிதல் மற்றும் பகுத்தாய்தல், கற்பித்தல் திறன் மற்றும் ஆற்றல் வளர்த்தல், கணித பகுத்தறிவு மக்கள் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் ஆகிய தலைப்புகளில், இணை பேராசிரியர் சாஹிர் உசேன், துணை பேராசிரியர் பாயத் அலி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
பயிற்சியில் உதவி பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

