ADDED : மார் 04, 2025 07:01 AM

நடுவீரப்பட்டு; பண்ருட்டி-பாலுார் சாலையில் புதியதாக போடப்பட்ட தார்சாலையில் தினமலர் செய்தி எதிரொலியால் வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது.
பண்ருட்டி-கடலுார் சாலையில் முத்துநாராயணபுரத்திலிருந்து பாலுார் குயிலாப்பாளையம் வரை சாலை பழுதடைந்திருந்தது.இதனால் கடந்த மாதம் இந்த சாலைக்கு புதியதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை போடப்பட்டு மாதங்களாகியும் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் சாலையை இரண்டாக பிரித்து வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கவில்லை.
இதனால் இரவு நேரத்தில் வெளியூர்களிலிருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரியாமல் வேகமாக வந்து சடன் பிரேக் பிடிப்பதால் கீழே விழுந்து விபத்துக்கள் நடந்து வந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக நேற்று அப்பகுதியில் உள்ள வேகத்தடைக்கு நெடுஞ்சாலைத்துறையினர் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.