ADDED : மார் 12, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: துப்பாக்கி சுடும் போட்டியில், அரசு கல்லுாரி மாணவி மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனைபடைத்துள்ளார்.
குமராட்சியில் உள்ள காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.சி.சி., மாணவி கீர்த்தனா, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்றார். தென் மண்டல போட்டிகளிலும் பங்கேற்றார்.
மாணவியை பாராட்டி, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், பரிசு வழங்கினார்.
இந்நிலையில் தமிழ்நாடு 6 வது பட்டாலியன் என்.சி.சி., நிர்வாக அதிகாரி சக்கரபர்த்தி, கல்லுாரியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவி கீர்த்தனாவை பாராட்டினார். கல்லுாரி முதல்வர் மீனா, என்.சி.சி., அலுவலர் சரவணன் உடனிருந்தனர்.