ADDED : மார் 03, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலில் மூழ்கிய பள்ளி மாணவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கி ேஷார் (எ) வெங்கடேசன், 15; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
இவர், நேற்று சிங்காரத்தோப்பு கடற்கரையி்ல் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. தீயணைப்பு வீரர்கள், கிேஷாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலுார், துறைமுகம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.