/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் மாணவர்கள் தேர்வு
/
மாவட்ட கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் மாணவர்கள் தேர்வு
மாவட்ட கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் மாணவர்கள் தேர்வு
மாவட்ட கூடைப்பந்து அணிக்கு கடலுாரில் மாணவர்கள் தேர்வு
ADDED : மார் 13, 2025 12:15 AM
கடலுார்: கடலுார் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வரும் 16ம் தேதி காலை 8:00 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் தேர்வு நடக்கிறது.
மாவட்ட கூடைப்பந்து சங்க இணை செயலாளர் சகாயசெல்வன் அறிக்கை;
கடலுார் மாவட்ட கூடைப்பந்து அணிக்காக வரும் 16ம் காலை 8:00 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள கூடைபந்து அரங்கத்தில் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான தேர்வு நடக்கிறது. 1.1.2009ம் ஆண்டிற்கு பின் பிறந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர்கள் வரும் 29 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை திருச்சி, (பெண்) மற்றும் கோயம்புத்துாரில் (ஆண்) நடைபெறும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கடலுார் மாவட்ட அணி சார்பாக கலந்து கொள்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.