/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்: சிதம்பரம் சப் கலெக்டர் எச்சரிக்கை
/
சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்: சிதம்பரம் சப் கலெக்டர் எச்சரிக்கை
சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்: சிதம்பரம் சப் கலெக்டர் எச்சரிக்கை
சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும்: சிதம்பரம் சப் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 22, 2024 12:44 AM
காட்டுன்னார்கோவில் : வருவாய்த்துறையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என, சிதம்பரம் சப் கலெக்டர் லாஷ்மிராணி எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், குறிப்பாக பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது என, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பட்டா மாற்றத்திற்கு 6 மாதமாக அலைந்து வருவதாக ஒருவர் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். அது தமிழகம் முழுவதும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பங்கேற்ற கூட்டம் நடந்தது.
சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி கூட்டத்தில் பேசுகையில், பட்டா மாற்றத்திற்காக, விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா மாற்றப்பட வேண்டும்.
கையூட்டு எதிர்பார்த்து பட்டா மாற்றம் செய்யமல் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையான அவணங்கள் இல்லையெனில் அடுத்த 3 நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்குள் சரியான காரணத்தை தெரிவித்து, மனுவை நிராகரிக்க வேண்டும். 28 நாட்கள் வைத்திருந்து, 29 நாள் நிராகரித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
லஞ்சம் கேட்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் உடனடியாக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை பாயும். மேலும், வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 10 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் 3 நாட்களில், சரியான காரணத்துடன் நிராகரிக்க வேண்டும் என, பேசினார். கூட்டத்தில் சப் கலெக்டரின் அதிரடி பேச்சு, வருவாய் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

