
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில், கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது செயல் அலுவலர் மாற்றப்பட்டு, அதுமுதல் நிரந்தரமாக நியமிக்கப்படாமல், பொறுப்பு செயல் அலுவலரே பணியாற்றி வந்தார்.
இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய வெற்றிஅரசு, புவனகிரிக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு, சேர்மன் கந்தன், துணை சேர்மன் லலிதாமணி மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

