/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாடா ஏஸ் வேன் கவிழ்ந்து அரசு டவுன்பஸ் சேதம் பெண்ணாடம் அருகே பரபரப்பு

ADDED : மார் 06, 2025 01:49 AM

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே டாடா ஏஸ் வேன் கவிழ்ந்ததில், அரசு டவுன்பஸ் சேதமடைந்து, அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் வேன் டிரைவர் உயிர் தப்பினர்.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில், நேற்று விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி டாடா ஏஸ் வேன் சென்றது. திட்டக்குடி அடுத்த கூடலுார் குடிகாடு கலைவாணன், 22, என்பவர் ஓட்டி சென்றார். பகல் 1:30 மணியளவில் பெண்ணாடம் அடுத்த சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து, உருண்டது.
அப்போது அவ்வழியே திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் சென்ற அரசு டவுன்பஸ் மீது வேன் மோதி நின்றது. இதனால், பஸ்சில் இருந்து பயணிகள் கூச்சலிட்டனர். பஸ்சின் ஒரு பகுதி சேதமானது. பஸ் பயணிகள் மற்றும் வேன் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறிதது பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சாலையில் கவிழ்ந்த டாடா ஏஸ் வேனை பொது மக்கள் உதவியுடன் அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.