ADDED : ஜூன் 10, 2024 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார்.
செயலாளர் அப்துல் வஹாப், பொருளாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் யாசர் அராபத், துணை செயலாளர் உபைதுல்லாஹ் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் பாரூக் கண்டன உரையாற்றினார்.
பாலஸ்தீனத்தின் ரபா பகுதியில் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.