/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
/
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஆக 24, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் நடந்த பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மோதிலால், ஜெயக்குமார், காயத்ரி, கண்ணன் சுகுமாரன் கலைச்செல்வி உட்பட பலர் பயிற்சி அளித்தனர். மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
முடிவில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.