sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்:கடலுார் வழியாக 3 நாள் இயக்க முடிவு

/

தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்:கடலுார் வழியாக 3 நாள் இயக்க முடிவு

தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்:கடலுார் வழியாக 3 நாள் இயக்க முடிவு

தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்:கடலுார் வழியாக 3 நாள் இயக்க முடிவு


ADDED : செப் 17, 2024 05:58 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் வழியாக தாம்பரம்-ராமநாதபுரம் சிறப்பு ரயில், வாரத்தில் மூன்று நாட்களாக இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு வாரம் 3 நாட்கள் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. வாரத்தில் வியாழன், சனி, திங்கள் கிழமை ஆகிய 3 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். வரும் 19ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06104) செங்கல்பட்டு 5:27 மணிக்கும், மேல்மருவத்துார் 6:00, விழுப்புரம் ஜங்ஷன் 7:10, பண்ருட்டி 7:41, கடலுார் துறைமுகம் 8:07, சிதம்பரம் 8:36, மயிலாடுதுறை 9:48, திருவாரூர் ஜங்ஷன் 11:15, காரைக்குடி 3:20, ராமநாதபுரம் மறு நாள் காலை 5:55 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல், எதிர்திசையில் (ரயில் எண் 06104) ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய கிழமைகளில் 3 நாட்கள் இந்த ரயில் செல்லும். ராமநாதபுரத்தில் காலை 10:55 மணிக்கு புறப்படும் ரயில் திருவாரூர் 3:50, மயிலாடுதுறை 4:58, சிதம்பரம் 5:35, கடலுார் ஜங்ஷன் 6:15, பண்ருட்டி 6:41, விழுப்புரம் 7:55, தாம்பரம் 11.10 மணிக்கும் சென்றடைகிறது.

பண்ருட்டியில் நிற்கும்

இந்த ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் நீக்கப்பட்டது. இதுகுறித்து பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கடலுார் எம்.பி.விஷ்ணுபிரசாத் மூலம் கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து, எம்.பி., கோரிக்கையின்பேரில் மீண்டும் தாம்பரம்-ராமநாதபுரம் ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இத்தகவலை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட பி.ஆர்.ஓ., வினோத் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us