/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் வெயில் அதிக பட்சமாக 96 டிகிரி பதிவு
/
மாவட்டத்தில் வெயில் அதிக பட்சமாக 96 டிகிரி பதிவு
ADDED : ஏப் 27, 2024 04:25 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று வெயில் அளவு அதிகபட்சமாக கடலுாரில் 96 டிகிரி வெயில் பதிவானது.
இந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்ததால் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.
ஆனால் கடலுார் மாவட்டத்தில் இதுவரை 100 டிகிரி வரை வெப்பம் உயரவில்லை.
கடந்த 20ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 98.6 டிகிரி வெயில் பதிவானது. அதைத்தொடர்ந்து அந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை. நேற்று 96 டிகிரி பதிவானது.
காலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் மிகுதியால் புழுக்கம் ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பிற்பகல் வேளையில் காற்றில் ஈரப்பதம் அதிகளவு இல்லாத காரணத்தாலும், கடல்காற்று வீசுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகளவு தெரியவில்லை.
கத்தரி வெயிலின்போது அதிகளவு வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பாக்கப் படுகிறது.

