ADDED : ஆக 06, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) அருணாச்சலம் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., பிரபு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தனியார் பஸ் சர்வீஸ் மாவட்ட செயலாளர் தேசிங்கு ராஜா, தாலுகா செயலாளர் சதீஷ்குமார், தலைவர் வேலவன், பொருளாளர் சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.