ADDED : ஆக 07, 2026 06:11 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில்வே கேட்டில் நேற்று பராமரிப்பு பணி நடந்ததால், அந்த வழியாக சென்று வந்த அனைத்து வாகனங்களும், புதுச்சத்திரம் வழியாக இயக்கப்பட்டன.
பரங்கிப்பேட்டை ரயில்வே கேட்டில் நேற்று பராமரிப்பு பணி காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணி வரை நடக்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில், அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடந்தது.
இதனால், சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் பஸ், கார், வேன் உள்ளிட்டஅனைத்து வாகனங்களும் புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தன. மாலை 6:00 மணிக்கு மேல் பரங்கிப்பேட்டை ரயில்வே கேட் வழியாக வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டன
