/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாரண மாணவர்களுக்கான பயிற்சி முகாம்
/
சாரண மாணவர்களுக்கான பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 10, 2024 04:45 AM

சிதம்பரம் : சிதம்பரம் கல்வி மாவட்ட,சாரண இயக்கத்தில் 10 வயதுக்குட்பட்ட குருளையர்கள், நீலப்பறவைர்களுக்கான மாநில பயிற்சி முகாம் நடந்தது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த 3 நாள் முகாமில், 5 பள்ளிகளில் இருந்து 42 குருளையர் மாணவர்கள், 21 நீலப்பறவையர் மாணவியர், 9 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறப்பு பயிற்சியாளர்களாக வேணுகோபால், இளையகுமார்,வேலாயுதம், ஜெயந்தி செயல்பட்டனர்.
இதில்மாணவர்களுக்கு பாடல் பயிற்சி, கயிற்று கலை. முதலுதவி வனக்கலை குறியீடு, கதை பயிற்சி, சிறப்புச் சின்னம் போன்ற பயிற்சிகளை அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில், சிதம்பரம் சாரண மாவட்டதலைவரும் வீனஸ் கல்விக் குழுமதாளாளருமான குமார் பங்கேற்று பேசினார். மாவட்ட அமைப்பு ஆணையர் வேலாயுதம் வரவேற்றார். குருளையர் பிரிவு ஆணையர் கவிதா, நீலப்பறவையர் பிரிவு ஆணையர் கீதா வாழ்த்துரை வழங்கினர்.
ஏற்பாடுகளை சாரண ஆசிரியர் சோமசுந்தரம், குருளையர் அசிரியர்கள் சோனியா, ரேணுகா, சரளா, வசந்தஜெயா,சுஜாதா,சத்தியா, நீலபறவை ஆசிரியர்கள் சித்ரா, கயல்விழி, சுபாஷினி, உஷா செய்திருந்தனர். மாவட்ட சாரண செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.