
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில் இசையாஞ்சலி விழா 19ம் தேதி மாலை துவங்கியது. சங்கத் தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் அருள் முன்னிலை வகித்தனர். இசையாஞ்சலி செயலாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.
விழாவில், எடஅன்னவாசல் மங்கல லய நாத தம்பதியினர் மணிசங்கர், ஜெயந்தி சங்கர், சிறப்பு தவில் அமிர்தவர்ஷினி மணிசங்கர் ஆகியோரின் நாத சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. 20ம் தேதி திருமுறை இசை நிகழ்ச்சி, நேற்று நாட்டியாஞ்சலி நடந்தது.
இன்று மாலை 6:45 மணியளவில் கருவி இசை, நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மஹதி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

