/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூவர் கொலை வழக்கு இரு வாலிபர்கள் கைது
/
மூவர் கொலை வழக்கு இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 19, 2024 05:02 AM
கடலுார்: கடலுார் அருகே தாய், மகன், பேரனை கொலை செய்து, எரித்த வழக்கில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60; இவரது இளைய மகன் சுமந்த்குமார், 37; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மகன் இசாந்த், 8; இவர்களின் வீட்டில் இருந்து கடந்த 15ம் தேதி துர்நாற்றம் வீசியது.
நெல்லிக்குப்பம் போலீசார், பூட்டை உடைத்து பார்த்தபோது கமலீஸ்வரி உள்ளிட்ட மூவரும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.
நெல்லிக்குப்பம் போலீ சார் வழக்கு பதிந்து,7 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
அதில் கிடைத்த தகவலின்பேரில் காராமணிக்குப்பம் சீத்தாராம் நகர் பழனி மகன் சங்கர் ஆனந்த், 21; முகமது அலி மகன் சாகுல் அமீது, 20; ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வரும்.