/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
ADDED : ஜூலை 30, 2024 05:27 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு நேற்று ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் தரி சனம் செய்தனர். இரவு மஞ் சத்தில் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து காலை பல்லக்கிலும், இரவு கிளி, பூத, யானை, கமல, வெள்ளி அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் அன்னபட்சி வாகனத்தில் தீர்த்தவாரி, இரவு ஸ்படிக பல்லக்கில் வீதியுலா, 8ம் தேதி அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.